விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு. சம்பவத்தன்று இந்த இளைஞரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், ப்ளிப்கார்ட்டில் குலுக்கலில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பரிசு  உங்களுக்கு விழுந்துள்ளது என்று ஆசை வார்த்தைகூறியுள்ளார். இதனை நம்பிய  இளைஞர் சந்த்ருவும், தன்னுடைய ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அந்த பரிசுத்தொகையை பெறுவதற்கு முன், முன்பணம் செலுத்தவேண்டும் என கூறியதை நம்பி 5 தவணைகளாக ரூ.1 லட்சத்து 800-ஐ அந்த நபருக்கு சந்துரு அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் தனக்கு வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்த்ரு போலீசில்  புகார் அளித்துள்ளார்.