உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் சனா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டு தனது 2 பிள்ளைகளுடன் அந்த நாட்டிலேயே வசித்து வருகிறார்.

சமீபத்தில் 45 நாட்கள் விஷால் மூலம் சனா இந்தியாவிற்கு வந்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 24-ஆம் தேதி சனா தனது இரண்டு குழந்தைகளுடன் அட்டாரி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்ல முயற்சி செய்தார். ஆனால் அவர் இந்தியா கடவுச்சீட்டு வைத்திருந்ததால் அந்த நாட்டு அதிகாரிகள் பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

அவரது இரண்டு பிள்ளைகளும் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் தனது பிள்ளைகளை தனியே அனுப்புவதற்கு சனா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதுகுறித்து சனா, கூறும்போது, எனது விசா காலாவதியாகி விட்டதால் இந்தியாவை விட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். எனது வரவுக்காக கணவரும் அவரது உறவினர்களும் காத்திருந்த நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு செல்ல முடியவில்லை என கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.