ஈரோடு, சிவகிரியை அடுத்த நல்ல செல்லிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. 72 வயதான இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது  இரண்டு சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நைசாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளுள் ஒருவர் தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முதியவர் ராமசாமி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் காவல்துறையினர் இவரை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.