பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இன்று  வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

B.E, B.Tech உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அரசு பள்ளி சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.