இந்தியாவில் கொரோனா காலத்தில் நிபந்தனை இன்றி பிஎஃப் பணத்தை முன் பணமாக எடுப்பதற்கு சில சிறப்பு சலுகைகளை பயனர்களுக்கு EPFO நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சலுகைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் தங்களுடைய பிஎப் கணக்கில் இருந்து எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் பணம் எடுக்கக்கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த சலுகைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து திருமணம், உயர்கல்வி மற்றும் வீடு கட்டுமானம் உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் முன்பணம் பெற முடியும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.