தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் என பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் படங்களில் நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருந்தாலும் படம் வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. அதன் பின்னும் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதோடு 41 வயதிலும் குறையாத கவர்ச்சியில் போட்டோ எடுத்து போஸ்ட் செய்து வருகிறார். சமீபத்தில் ஷோடைம் என்ற தொடரில் “மந்த்ரா” என்ற ரோலில் நடித்த அவர் கதாநாயகனுடன் படுக்கையறை காட்சிகளில்  நடித்து மிரள வைத்துள்ளார்.

இந்நிலையில் ஓடிடி தளத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் குட்டையான ஆடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தையும் உச்சகட்ட கவர்ச்சியில் தங்க நிற ஆடைகள் அணிந்தபடி போட்டோஷூட் செய்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் இதற்கு லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.