சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காவலர் ஒருவர் பெண்ணிடம் நீங்கள் கணவன் மனைவியா என்று கேட்டுள்ளார். இதற்கு அந்தப் பெண் கோபத்தோடு பதிலடி கொடுத்த நிலையில் தற்போது அந்த காவலரை பணியிடை மாற்றம் செய்துள்ளனர். அதாவது சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் இரவு நேரத்தில் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் நீங்கள் கணவன் மனைவியா என கேட்டுள்ளார்.

அவர் மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் கணவன் மனைவி மட்டும் தான் பீச்சுக்கு வர வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதோடு அந்த பெண் அந்த காவலர் பேசியதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவலர் ராஜ்குமாரை பணியிட மாற்றம் செய்துள்ளனர். மேலும்   இந்த உத்தரவை மாவட்ட காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.