
தெலங்கானா மாநிலம் மஹ்பூபாபாத்தில் உள்ள பார் ஒன்றில் அனில் என்ற இளைஞர் சம்பவத்தன்று மூன்று கிங்பிஷர் பீர்களை வாங்கி விட்டு அதை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் குடிப்பதற்காக பீர் பாட்டில்களை திறந்து பார்த்தபோது ஒரு பீர் பாட்டில் ஏதோ இருப்பது தெரிந்துள்ளது.
இதனையடுத்து அவர் அதை பரிசோதனை செய்துள்ளார். அப்போது அதில் அழுகிய துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் அதி குப்பைகள் இருப்பதால் கடைக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கலப்பட மதுபானங்கள் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.