கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் என்ற பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் அவருடைய வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த திருடன் அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவில் இருந்து பணம் நக என அனைத்தையும் திருடிச் சென்றுள்ளான்.

இந்த நிலையில் இன்று காலை வீடு திரும்பிய ஞானசுந்தரம் நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 22 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருட்டு போனது தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் கொள்ளையன் நடுவீட்டில் மலம் கழித்து விட்டு சென்றுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.