திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். நேற்று முன்தினம் அருணாச்சலம் தனது வீட்டு மாடியில் நின்று புகை பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதனால் படுகாயமடைந்த அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருணாச்சலத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.