
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் இருந்து ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஷாலினி என்ற பெண் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது கைப்பையில் இருந்து 5 பவுன் தங்க நகை காணாமல் போனது. இதுகுறித்து ஷாலினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஷாலினியிடம் இருந்து தங்க நகையை திருடிய அக்காள், தங்கையான காவியா(30), பல்லவி(32) ஆகிய இரண்டு பெண்களை கைது செய்து விசாரித்தனர். அப்போது இருவரும் தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் போலீசார் நகையை மீட்டு ஷாலினியிடம் ஒப்படைத்தனர்.