ஹைதராபாத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் வளாகத்தில் நடந்த வன்கொடுமையான நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் ஆஷிஷ் எனப்படும் தொழிலதிபர். இவர் தனது  நாயுடன் வாக்கிங்கில் சென்றபோது, அடுக்குமாடி குடியிருப்பின் பார்கிங் பகுதியில் இருந்த 5 புதுதாக பிறந்த தெரு நாய்க்குட்டிகளை கல்லால் அடித்தும் மற்றும் காலால் உதைத்தும் சுவரில் வீசியும் கொன்று விடுகிறார்.

 

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ‘Khan’ எனும் பயனர் பகிர்ந்துள்ளார். அதில், “எங்கள் சமூகத்தில் நடந்து கடந்த ஒரு கொடூரமான மிருகத்தனத்தை பற்றி விரைவாகத் தகவல் தர விரும்புகிறேன். ஒரு நபர், பிறந்த சில நாட்களேயான நாய்க்குட்டிகளை கல்லால் அடித்து, சுவரில் போட்டு கொலை செய்தார்” என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் PETA இந்தியாவை டேக் செய்துள்ளார்.

அபார்ட்மென்ட் குடியிருப்பினர் ஆஷிஷிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, “நாய்க்குட்டிகள் என் நாயை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தான் நான் இதைச் செய்தேன்” என்று பதிலளித்தார். ஆனால் சிசிடிவி காட்சிகளில் இவர் குறும்படமாகவே அந்த நாய்க்குட்டிகளை தூக்கி அடித்து கொல்வது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில், தற்போது வரை அவரது மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். மேலும் இந்தியாவில் மிருகங்களுக்கு எதிரான வன்முறைகள் பல சட்டங்கள் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.