
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பாண்டிராஜ், விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் முதல் படமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நினையில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த புதிய படத்தில் கதாநாயகியாக நித்யா மேனனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே நித்யா மேனன் இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் தமிழில் முதன் முறையாக விஜய் சேர்ந்து சேதுபதியுயோடு நடிக்கும் படமாக இது அமையும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் மலையாளத்தில் 19 (1) (ஏ) என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.