
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி ஒடிசா மற்றும் மியான்மரை நோக்கி செல்லும் எனவும் இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.