
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே அஜித் சினிமாவை தாண்டி பைக் ரைடில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில் அவர் AK Moto Ride என்ற புதிய நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார். இந்த நிறுவனம் பைக்கில் சுற்றுலா செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். தற்போது இந்த நிறுவனத்திற்காக அஜீத் வெளிநாட்டில் இருந்து பத்து விலை உயர்ந்த பைக்கை வாங்க உள்ளார். இந்த ஒரு பைக்கின் விலை மட்டும் 1.25 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.