
தேமுதிக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள பிரேமலதா விஜயகாந்த்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி அவர்கள், தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தமிழக மக்களின் பேரன்புக்கு உரியவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆற்றலும், துணிச்சலும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடமும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். கேப்டன் அவர்கள் முன்னெடுத்த மாற்று அரசியலை, மேலும் பல படிகள் முன்கொண்டு செல்ல, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி அவர்கள், தமது புதிய பொறுப்பில்…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) December 15, 2023