இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ராயல் என்பீல்ட் குரில்லா 450 வருகின்ற ஜூலை 17ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 2.30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. டாப் வேரியண்ட், 2.45 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கின் 2 வேரியண்ட்களிலும் ஒரே இன்ஜின் ஆப்ஷன் தான் கொடுக்கப்படவுள்ளது. 452 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆகும். இதனை தவிர 17 இன்ச் அலாய் வீல்கள், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் சிங்கிள் பீஸ் சீட் ஆகிய அம்சங்களும் உள்ளது.