தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காரணமாக கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்த 2.8 லட்சம் பேருக்கு இந்த மாதம் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை பெறுபவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதி பெற்றவராக இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுடைய மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.