தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இனி புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதில் தகுதி பெரும் குடும்ப தலைவிகளை மகளிர் உரிமை திட்டத்தில் இணைத்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிகிறது.