புதிய வகை கொரோனா பரவல் சிங்கப்பூரில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவருமே முகவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ பட தேவை கிடையாது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. அதிலும் முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.