நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு இருப்பிடங்களை வாடகை இல்லாமல் வழங்கும் பட்சத்தில் அவர்களுக்கான மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த புதிய பலன்களை பெரும் ஊழியர்கள் தங்களின் வருமான வரியில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழும் ஊழியர்கள் 10 சதவீதம் சம்பளத்தை வரியாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் தற்போது  15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வசிக்கக்கூடிய ஊழியர்கள் 7.5% வரியாக செலுத்த வேண்டும். தற்போது மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் பலரும் வருமான வரி சலுகை வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த புதிய சலுகை ஆனது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.