
புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதி முடிந்த நிலையில் மே மாதம் முழுவதும் கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் வரும் ஜூன் ஏழாம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.