
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் நேற்று சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக சந்தர்ப்பவாதி என்று விமர்சித்தார். அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயையும் அவர் விமர்சித்தார். அவர் பேசியதாவது, பாஜகவுடன் திமுக மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது என்று விஜய் கூறுகிறார். இப்போதுதான் அவர் வடைகடை போட்டுள்ளார். அந்த வடையை மக்கள் எவ்வளவு பேர் வாங்குகின்றனர்.
காக்கா எத்தனை வடையை தூக்கிக் கொண்டு போகும் என்பது இனிதான் தெரிய வரும் என்றார். முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருக்கிறார்கள் என்றும் இருவரும் உறவுக்காரர்கள் என்றும் விமர்சித்தார். அதிமுகவுடன் கூட்டணியை பாஜக அறிவித்த போது பழைய பங்காளியான அதிமுகவை பகிரங்கமாக பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது என்று விஜய் கூறிய நிலையில் திமுகவும் மறைமுகமாக உறவில் தான் இருக்கிறது என்றார். மேலும் இந்த நிலையில்தான் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இதனை விமர்சித்துள்ள