
நாட்டில் ரேஷன் விநியோக திட்டம் பல்வேறு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக நாடு முழுவதும் மக்களுக்கு நிலையான விலையில் ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் விநியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால் ரேஷன் அட்டை தயாரிக்கும் பணியும் மாநில அரசின் கீழ் வரும். இதனிடையே ரேஷன் அட்டை தயாரிப்பதற்குரிய போர்டலானது ஒவ்வொரு மாநில மக்களுக்கும் வேறுபடும்.
நீங்கள் உத்தரபிரதேசத்தில் வசிப்பவராக இருப்பின் https://nfsa.up.gov.in/Food/citizen/Default.aspx இணையதளத்தை பார்வையிடுவதன் வாயிலாக ரேஷன்கார்டை பெறலாம். அதே சமயத்தில் நீங்கள் பீகாரில் வசிப்பவராக இருப்பின், பீகார் அரசாங்க இணையதளமான http://epds.bihar.gov.in/-ஐ பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நீங்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருப்பின், https://tnpds.gov.in/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த போர்ட்டல்களில் பெயர், முகவரி மற்றும் வருமானத் தகவல்களை கொடுக்கவும். பின் தகவல் சரியாக இருப்பின் உங்களது ரேஷன் கார்டு தயாராகிவிடும்.