
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் சைவ உணவை விட அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வீதிக்கு வீதி அசைவ உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றை காணப்படுகிறது. இதையடுத்து சமூக வலைத்தளத்திலும் மக்கள் அனைவரும் உணவுகள் சம்பந்தமான வீடியோக்கள், டிப்ஸ், ரெசிப்பீகள் போன்றவற்றை பார்த்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் சமையல் வல்லுநர் ஒருவர் தர்பூசணியை வைத்து புதுவகையான ரெசிபி ஒன்றினை செய்துள்ளார். அதாவது அவர் ப்ரைடு சிக்கன் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் உணவுப் பிரியர்கள் இதை பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு உணவு பிரியர்கள் கமெண்ட் செய்து அவர்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகின்றனர்.
ever tried chicken fried watermelon? pic.twitter.com/7RX44Z30QI
— FearBuck (@FearedBuck) July 18, 2024