திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஆம்பூர்,திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் போதை பொருள்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதோடு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதைப் பொருள்களில் அடிமையாகி வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு வகுப்பறையில் சில மாணவர்கள் தங்களது பைகளில் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் வந்தது.

இந்த தகவலை அறிந்த ஆசிரியர்கள் வகுப்பறைக்கு சென்று மாணவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களின் பைகளில் சிறிய வெள்ளை நிற பையில் கஞ்சா மாதிரியான போதை பொருள் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து  பள்ளி நிர்வாகம் அந்த ஏழு மாணவர்களையும் ஒரு வாரம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.