உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் மிகவும் உற்சாகமாக புத்தாண்டு பண்டிகையை கொண்டாடினார்கள். அந்த வகையில் அமெரிக்காவிலும் புத்தாண்டு பண்டிகை களைகட்டியது. இந்நிலையில் நியூ ஓர்லேன்ஸ் நகரில் நேற்று புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது திடீரென மக்கள் கூட்டத்திற்குள் வேகமாக வந்த ஒரு கார் புகுந்தது. இந்த கார் அங்கிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதிய நிலையில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

அதன்பிறகு 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அந்தக் காரில் இருந்து இறங்கியவர் திடீரென கூட்டத்தை நோக்கி தன்னுடைய துப்பாக்கியால் சுட்டதாகவும் அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது 10 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில் இன்னும் முழுமையாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற விவரம் சரிவர தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.