நாடு முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியது. சென்னை காசிமேடு பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், ஆகாஷ், அபினேஷ் ஆகியோர் போதையில் புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். அவர்கள் மதுபானம் அருந்தியதை குமரேசன் தட்டி கேட்டுள்ளார். மேலும் புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த நபர்கள் குமரேசனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனை தடுக்க முயன்ற குமரேசனின் நண்பருக்கும், அவரது தந்தைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமரேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட குமரேசனுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.