
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான ஜோகேஸ்வரியை சேர்ந்தவர் வினித் தேசாய். நீச்சல் பயிற்சியாளரான இவர் டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளார். அப்போது இரவு 2:00 மணி அளவில் சாலை ஒன்றை கடக்க முயன்ற போது ஆட்டோ ரிக்ஷா ஒன்று வினித் தேசாய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவர் பின்னால் வந்த மற்றொரு ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 3 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டோவை ஓட்டிச் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபரை தேடி வருகின்றனர்.