இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாக வனவிலங்குகள் வீடியோக்கள் மனிதர்களிடம் ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

மனிதர்களை விட விலங்குகள் மிகவும் நேர்மையாக நடந்து கொள்ளும். அதனை பறைசாற்றும் வகையில் ஒரு குரங்கின் புத்திசாலித்தனம் மற்றும் நேர்மையை காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அதாவது புத்திசாலித்தனமாக ஒரு கையில் பழத்தை வாங்கிக் கொண்டு தான் கையில் எடுத்துச் சென்ற விளக்குமாறு மிகவும் நேர்மையாக உரிமையாளரிடம் திரும்பிக் கொடுக்கும் குரங்கு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.