இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக இருப்பவர் ஜூஸ்பிரீத் பும்ரா. இவர் தற்போது சிறந்த பவுலராக இருப்பதாக முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இவர் வித்தியாசமான ஆக்ஷனை பின்பற்றி பந்து வீசுவதால் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாக இருக்கிறது.

குறிப்பாக அழுத்தமான சமயத்தில் யார்கர் பந்தை வீசும் போது தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைக்கிறார். இவர் டி20 உலக கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்களை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்தார். இதனால் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது உம்ரா தான் தனக்கு பிடித்த பவுலர் என்று எம்.எஸ் டோனி பாராட்டிருந்தார். அதேபோன்று பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் பும்ரா போன்றே பந்து வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஓடிவரும் அந்த பெண் பந்தை ரிலீஸ் செய்வதும் அவரை போன்றே உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

“>