
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பான முறையில் செயல்பட்டார். இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் போது பும்ரா கிரிக்கெட் வர்ணனையாளர் ஈஷா குகா பும்ராவௌ MVP (most valuable player) என்று குறிப்பிட்டார். பின்னர் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் most valuable primate என்றார். அவர் மிகவும் மதிப்பு மிக்க பிரைமட் என்று குறிப்பிட்டார்.
இதில் பிரைமட் என்பது குரங்கு இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. அவருடைய கருத்து சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்திய ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் ஒரு கிரிக்கெட் வீரரை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு பேசுவதா என்று ஈஷாவுக்கு கண்டனங்கள் குவிந்தது. இதற்கு தற்போது அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது பும்ரா ஒரு மதிப்பு மிக்க சிறந்த வீரர் என்றும் அவரை நான் பாராட்டத்தான் முயற்சித்தேன் அப்போது தவறுதலாக என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்து விட்டது எனவே என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் நான் பேசியதில் எந்த தவறும் நோக்கமும் இல்லை எனவும் மக்கள் இதை நம்புவார்கள் என்று நான் எண்ணுகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.