
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. அதன்படி சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் டி20 போட்டியில் மோதுகிறது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இளம் வீரரான சுப்மன் கில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டி20 இந்திய அணி மற்றும் ஒரு நாள் இந்திய அணி ஆகிய இரு அணிகளுக்கும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேர்வு குழு கூறும் நிலையில் கில் 3 விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியில் சீனியராக இருக்கும் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோரை விட்டுவிட்டு கில் துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தாலும் சிலர் அதற்கு கண்டனங்களையும் தெரிவித்தனர். இருப்பினும் கில் இந்திய அணியின் ஒரு நம்பிக்கை நட்சத்திர வீரராக இருப்பதால் அடுத்ததாக வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும் அவர் துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா இருந்த நிலையில் துணை கேப்டனாக பும்ரா இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு பதில் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.