
துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. மக்ஜாம் புயலானது ஆந்திராவின் நெல்லூர்-மசூலிபட்டினம் இடையே டிச.5ஆம் தேதி மாலை கரையை கடக்கும்.
சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது.