
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அவர் ரிஜு விஜயன். இவருடைய மனைவி பிரியா நாயர். பிரியா மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய சிகிச்சைக்காக இருவரும் மராட்டிய மாநில த்தில் வீட்டு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். பிரியாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு வாரமும் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால் விஜய் சிலரிடம் கடன் வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் ஜூலை 1ஆம் தேதி திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்த இருந்தும் அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமடைந்த அந்த தம்பதி நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர் . இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.