உத்திரபிரதேசம் உள்ளிட்ட வாடா மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்துவிட்டது. அதாவது சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் சென்று வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கின்றனர். இந்த புல்டோசர் நீதி குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினரை மட்டுமே குறிவைத்து நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த புல்டோசர் ‌ நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது கொசைன் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரக்ஷித் கான் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு தொடர்பான விசாரணை இன்று வந்தது.

அப்போது நீதிபதி வீடுகளை இடிப்பது தொடர்பாக முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்கப்படுவதோடு அவர்களுக்கு மாற்று வழி செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு பதில் சொல்லவும் வாய்ப்புகள் தரப்பட வேண்டும். இப்படி எதையுமே செய்யாமல் அவர்களின் வீடுகளை எப்படி இடிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பினார். அதாவது 50-60 வருடங்களாக வாழ்ந்து வந்த பூர்வீக வீடுகளை எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி இடித்து  விட்டதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கேட்டு நீதிபதிகள் ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால் எப்படி அவரின் வீட்டை இடிக்க முடியும். சட்டவிரோத கட்டுமானங்களை நாங்கள் பாதுகாக்கவில்லை. அதே சமயத்தில் அத்தகைய சொத்துக்களை இடிக்கும் போது உரிய விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.