உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனுடன் சுற்றுலா சென்றுள்ளார். ஹோட்டல் ஒன்றில் வைத்து தனது காதலனிடம் புஷ்பா 2 படம் பார்க்க வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு காதலன் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் ஹோட்டலின் மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காதலனை கைது செய்ததோடு ஹோட்டல் ஊழியர்களிடமும் அந்த பெண்ணிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.