தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் மற்றும் தக்காளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. காய்கறிகளின் விலை சற்று குறைவாக இருந்தாலும் வெங்காயம் தக்காளி விலை அதிகமாக இருப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு கிலோ பூண்டு 300 ரூபாய்க்கு விற்பனையானது. மத்திய பிரதேசத்தில் தற்போது பூண்டு விளைச்சல் குறைவாக உள்ளதால் வழக்கத்தை விட பூண்டு வரத்து தற்போது குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் 200 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்பனை செய்யப்பட்ட பூண்டு தற்போது 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.