தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக சமீப நாட்களாகவே செய்திகள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயம் படம் வெளியாகி 21 வருடங்கள் முடிவடைந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அவருடைய மனைவி ஆர்த்தி. ஆனால் நேற்றைய தினம் தன்னுடைய இன்ஸ்ட்டாவில் இருந்து ஜெயம் ரவியின் புகைப்படம் அனைத்தையும் நீக்கி இருக்கிறார்.

மேலும் இவர்களுடைய பிரிவிற்கு தயாரிப்பாளரான இவருடைய மாமியார் தான் காரணம் என்று கருத்துக்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியை பின்தொடர்வதை நிறுத்தி இருக்கிறார் ஆர்த்தி. மேலும் அவரை அன்பாலோ செய்துள்ளார். மேலும் தன்னுடைய மகன்களோடு இருக்கும் புகைப்படத்தையும் நீக்கி இருக்கிறார்.