பூமி தவிர மற்ற கோவிலில் உயிர்கள் வாழ முடியுமா? என்று ஆய்வு செய்ததில் செவ்வாய் கோளில் வாழலாம் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய் மற்றும் நிலவில் தற்போது அதிகமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தவிர வெள்ளி கோளிலும் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் வெள்ளி கோளில் பூமியை போல தண்ணீர் இருந்தாலும் நாளடைவில் அங்கிருந்து தண்ணீர் அனைத்துமே ஆவி ஆகிவிட்டதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு வீனஸ் கிரகம் உருவானபோது தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு சூரிய மண்டலத்தில் பசுமை இல்ல  விளைவை வீனஸ் கிரகம் எதிர்கொண்டதன் காரணமாக அதன் மேற்பரப்பில் 90 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்ததால் அதிலிருந்து தண்ணீர் முழுவதுமாக ஆவி ஆகி உள்ளது.