இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் அஜய் யோஜனா என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது. ஒன்றிய அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டம்தான் பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டம். இந்த திட்டம் பிரதான் மந்திரி அஜய் யோஜனா என்று அழைக்கப்படுகிறது.

பெண்கள் சுய தொழில் தொடங்கிய தொழில் முனைவோர்களாக உயர்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தில் மானியம் வழங்கப்படுகின்றது. இதில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் தொகையும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றால் 50 ஆயிரம் ரூபாய் மட்டும் திருப்பி செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகை மானியமாக கணக்கிடப்படும். இவ்வாறு 50 சதவீதம் வரை மானியம் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதனைப் போலவே மீதமுள்ள ஐம்பதாயிரம் ரூபாய் கடனுக்கு வட்டி செலுத்த வேண்டாம்.

இந்த திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் பிரதான் மந்திரி அஜய் யோஜனா இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். பொது வசதி மையம் அல்லது பொது சேவை மையத்திற்கும் சென்று கடன் பெற விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய் பெரும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விவசாயம், தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற துறையில் பட்டியல் இனத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும்.