காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றினார. அப்பொழுது ஆண்களுக்கும் இலவச பேருந்து திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் பேசுகையில், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதில் நிறைவேற்றக் கூடியதை அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.