
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதனைப் போலவே தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடத்திற்கு 2000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர், ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயது நிரம்பிய பெண்களின் வங்கி கணக்கில் மாதம் 1500 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிதாக 20 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்றும் தெலுங்கு தேச கட்சியின் முதலாம் கட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.