
நாட்டில் உள்ள பெண்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசே மற்றொரு அட்டகாசமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கர்ப்பம்,பிரசவத்திற்கு பிந்தைய மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து செலவுகளுக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு ஐந்தாயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.இந்த பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். தமிழ்நாடு அரசும் கர்ப்பிணி தாய்மார்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.