இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைப் போலவே வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் உள்ளன. அதன்படி உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விருப்பமுள்ள பெண்களுக்கு அன்னபூர்ணா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலமாக 50,000 ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சமையல் கருவிகள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும் சாப்பாட்டு மேஜைகளை வாங்கலாம். இந்த கடன் வட்டி விகிதங்கள் சந்தைக்கு ஏற்ப மாறுபடும் எனவும் முழு கடனையும் மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை பெற பெண்களை எஸ்பிஐ வங்கி கிளையை தொடர்பு கொள்ளலாம்.