
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மக்கள் அனைவரும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் பிறரிடம் சாட்டிங் செய்யும்போது எமோஜிகளை அனுப்புவது வழக்கம். நாம் என்ன நினைக்கிறோம் என்ன உணர்கிறோம் என்பதை எழுதுவதற்கு பதில் எமோஜி மூலமாக பிறருக்கு தெரியப்படுத்த முடியும். இதில் பலரும் இதய எமோஜிகளை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இனிமேல் இந்த இதய எமோஜியை சிறுமிகளுக்கு அனுப்பினால் அது குற்றம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது குவைத் நாட்டில் வாட்ஸ்அப் அல்லது வேறு ஏதாவது சமூக வலைத்தளங்களில் சிறுமிகளுக்கு இதய எமோஜிகளை அனுப்பினால் அது குற்றம் என அந்த நாட்டு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடையதாக வரையறுக்கப்பட்டுள்ளது.