தமிழ் சினிமாவில் வளர்ந்தோறும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அருண்குமார். முதுமையில் காதல், ஒரு காரின் மீது உள்ள பிரியம் இவ்விரண்டையும் கருவாக வைத்து இயக்கிய திரைப்படம்தான் பண்ணையாரும் பத்மினியும். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து சேதுபதி படத்தை எடுத்தார். அதன் பிறகு சித்தார்த்தை வைத்து சித்த படத்தை எடுத்தார். தற்போது விக்ரம் வைத்து வீரதீரசோழன் படத்தை இயக்கினார். பல பிரச்சினைகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த அருண்குமார், “நான் சேதுபதி படத்தில் ஒரு தப்பு செய்துவிட்டேன். அந்த படத்தில் கணவன் மனைவி சண்டையில் சேதுபதி ரம்யாவை அடிப்பார். அப்போது ரம்யாவின் அம்மா அவரை அழைப்பார் வீட்டுக்கு வா போகலாம் என்று..   அதற்கு ரம்யா” இப்போ அடிச்சா திரும்ப வந்து கொஞ்சுவான்” அதற்கு நான் இங்கு இருக்கணும் என்று கூறுவார். இந்த கருத்தை பெண்கள் அவர்களுடைய ஸ்டேட்டஸ் வைக்கும் பொழுது தான் சமூகத்திற்கு தவறான கருத்து என்பது புரிந்தது. அப்போது நான் அதை யோசிக்கவில்லை. பெண்கள் மன்னிக்கவும்” என்று பேசி உள்ளார்.