மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் ஆதரவு அளிக்கும் விதமாக மத்திய அரசால் மகளிர் மதிப்பு திட்டம் என்ற திட்டமானது 2023 மார்ச் 31ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்களின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், 18 வயது உட்பட்ட பெண் குழந்தைகளும் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம். ஆயிரம் முதல் அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் கணக்கு தொடங்கிய நாளிலிருந்து இரண்டு வருடத்தில் முடிவடையும். அதன்படி இந்த திட்டமானது இன்றோடு முடிவடைகிறது.

இந்த நிலையில் இந்த திட்டத்தில் இதுவரை சேராதவர்கள் உடனடியாக சேர்ந்து பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடங்கியுள்ள இந்த  திட்டம் பெண்களுக்கு ஒரு சிறப்பான சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக வருடத்திற்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் நிறையும்போது 40 சதவீதம் வரை மீதி தொகையில் திரும்ப பெற அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்கள் பாதுகாவலர் மரணம் அடைந்தாலும் , தீவிர மருத்துவ காரணங்கள் இருந்தாலும் இந்த கணக்கை முடித்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் இந்த கணக்கை முடித்துக் கொள்ளலாம். பெண்கள் குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.