மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு ஒரு அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. “லக்பதி திதி யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பெண்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் நோக்கத்தோடு இந்த திட்டம் செயல்படுகிறது.  5 லட்சம் வரை கடன் வழங்கபடுகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்கள் ஒருபோதும் வட்டி செலுத்த வேண்டியது கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்கு கடனை திருப்பி செலுத்தினால் போதும். இந்த திட்டம் பெண்கள் தங்களுடைய சொந்த தொழிலை செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் பெண்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி திட்டங்களும் இந்த திட்டத்தின் ஒரு பகுதி.

இதில் பல்வேறு  துறைகளில் பயிற்சி அளிப்பதோடு பெண்கள் வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதையும் ஆதரிக்கிறது. இந்த பயிற்சி திட்டங்கள் மகளிர் சுய உதவி குழுக்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 2023 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வரை சுமார் ஒரு கோடி பெண்கள் பயனடைந்துள்ளார்கள். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு தேவையான பயிற்சி அளித்து அவர்கள் வணிகத்தில் தங்களை நிலைத்து  கொள்வதற்கு உதவுவது. தொழில் தொடங்க கடனுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் உள்ளூர் சுய உதவி குழு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களான ஆதார் அட்டை, வருமான சான்று, பான் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவை தேவை.