ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புனித ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 10 பேர் சென்றுள்ளனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு அருகே உள்ள டீ கடையுடன் கூடிய ஒரு உடைமாற்று அறைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் உடை மாற்றுவதற்கான கட்டணத்தை செலுத்தினர். அப்போது அந்த அறையில் ஒரு ரகசிய கேமரா இருந்ததை  இளம் பெண் பார்த்து தன் தந்தையிடம் கூற அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரியின் படி காவல்துறை வழக்கு பதிவு செய்து ராஜேஷ் கண்ணன் (34), மீரான் மைதீன் (38) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் அங்கு வேலை பார்த்து வந்த நிலையில் பல மாதங்களாக ரகசிய கேமரா மூலம் உடை மாற்றுபவர்களை படம்பிடித்தது தெரியவந்தது. இவர்கள் பெண்கள் உடைமாற்றுவதை அந்த கேமரா மூலம் தங்கள் செல்போனில் பார்த்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைனில் வயர்லெஸ் இல்லாத 3 ரகசிய கேமராக்களை வாங்கியது தெரியவந்தது. மேலும் இந்த வீடியோக்களை அவர்கள் வேறு யாருக்காவது பகிர்ந்து உள்ளார்களா அல்லது பணம் கேட்டு மிரட்டினார்கள் போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.